Sunday, 3 October 2010

தேசிகர் திருமாளிகை - 1

ஸ்ரீரங்கத்தில் உத்திர வீதி சித்திரை வீதிகளில் ஆசார்யர்களின் திருமாளிகைகள் உள்ளன. நூற்றாண்டுகளுக்கு முன்பாக அவைகள் சிறு சிறு மண்டபங்களாகவும் கீற்று கொட்டகைகளாகவு மிருந்தன. அவைகள் காலக்ஷேப கூடங்களாக இருந்து சிஷ்யர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. பின் சந்ததியார்கள் அவைகளை நினைவுசின்னமாக (Memorial) பேணிகாத்து வந்தனர். காலம் மாறிய சூழ்நிலையில் மண்டபங்கள் சிதிலமடையத் தொடங்கின. அன்னியர்களின் படையெடுப்பு, ஆட்சி மாற்றம் காரணமாக மேலும் பல மாற்றங்கள் நேர்ந்ததன் விளைவு இப்போது நாம் காண்பது முற்றிலும் மாறானது. இன்றும் அநேக வீடுகளில் கல்தூண்கள் நினைவு சின்னமாக இருக்கின்றன. இன்றைய வீடுகள் எல்லாம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நவீன தோற்றம், அமைப்பு பெறத் தொடங்கின. ( ஆதிப்பிரான் ஆவணி 2010 பக்கம் 64 )

ஸ்ரீரங்கம் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவஹிந்திரபுரம் ஆகிய இடங்களும் தேசிகர் திருவடி சம்பந்தம் பெற்றவை தான். தேசிகர் ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்காத நிலையில் அவர் வாழ்ந்திருந்ததாக ‘திருமாளிகை’ என்று எதை குறிப்பிடுவது? தேசிகர் வசித்திருந்ததாகக் கருதப்படும் குடிலை நினைவு கூறும் வகையில் அத்தகைய இடத்தை வலைபோட்டுத் தேடினாலும் இப்போது எங்கும் நம்மால் காண முடியாது. கடந்த ஏழு நூற்றாண்டுகளில் நேர்ந்த மாறுதல்கள் ஏராளம்.

‘தேசிகர் திருமாளிகை’ பற்றி சில அரிய தகவல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். கடந்த நூற்றாண்டுகளில் ஸ்ரீரங்கம் உத்திரவீதிகளின் தரை மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டு போனதின் விளைவு திருமாளிகையின் தரை (Floor)) வீதியின் மட்டத்தை விட தாழ்ந்த நிலையில் உள்ளது. மழை வெள்ளம் தெருவில் பெருக்கெடுத்து ஓடினால் ஜலம் சுலபமாக உள்ளே வந்து விடும். நவீனமாக கட்டப்பட்ட அநேக வீடுகளில் தரை உயர்த்தப்பட்டுள்ளது. கொல்லைப்புற பகுதியும் தாழ்வாக இருப்பதால் அங்கு சாக்கடை தண்ணீர் வீட்டிற்குள்ளே ப்ரவேசிக்கிறது. வீட்டின் தரைப்பகுதியை உயர்த்தினால் மேற்கூரை பகுதி (ceiling) தலையை இடிக்கும். இந்த நிலையில் அந்த இடத்தை முற்றிலும் மாற்றி அமைத்து ஒரு புதிய கட்டிடத்தை உருவாக்குவதை தவிர வேறு எந்த வழியுமில்லை. ஸ்ரீ பரகால மடத்து ஜீயர் ஸ்ரீ ஹயக்ரீவனை எழுந்தருளப் பண்ணி இங்கே பரிவாரங்களுடன் தங்குவதற்கு உகந்ததாக ஒரு புனரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு அவஸியமா?
தேசிகர் திருவடி சம்பந்தம் பட்டிருந்ததைத் தவிர அவர் இங்கு வசித்திருந்ததற்கான தடங்கள் ஏதும் இப்போது காண்பதற்கில்லை. தேசிகர் இங்கு வசித்திருந்ததாக ஒரு மர்யாதை காப்பாற்றப்பட்டு வந்திருந்தால் அந்த இடத்தில் கடந்த நூற்றாண்டுகளில் குடித்தனங்கள் ஏற்பட்டிருக்கக் கூடாது. தேசிகர் வாழ்ந்திருந்ததாக கருதப்படும் இந்த இடத்தில் தற்போது காணப்படும் ஒரு சில தூண்கள் தான் நினைவு சின்னம் (Heritage) என்றால் அதை புதிய அமைப்பில் காப்பாற்றப்படுவது கடினமான விஷயமல்ல. இத்தகைய ஆலோசனைகளை கூடிப் பேசி தீர்வு காணலாம். இந்த வழிமுறையை தவிர்த்து விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு வழக்காடு மன்றத்தை அடைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. (ஆதிப்பிரான் புரட்டாசி 2010 பக்கம் 64 )

1 comment:

  1. Dear Mr.A.Shrinivasan

    i am reading more than 3 issues of adhipiraan in 1 edition i had readabout padipathu sristhuthi idipathu desikan thirumaaligai edition but following issues are really confusing me, as a magazine editor can you clearly explain whether swami had stayed there are not

    dasan
    pattabiraman
    95511330000

    ReplyDelete